×

அடுத்த டார்கெட் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா! – தயாராகி வருகிறது பா.ஜ.க

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்ததது பா.ஜ.க. அதேபாணியில் தற்போது மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியை கவிழ்த்துள்ளது. அடுத்தது மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சி மாற்றம் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க-வினர் கூறிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து
 

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்ததது பா.ஜ.க. அதேபாணியில் தற்போது மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியை கவிழ்த்துள்ளது.

அடுத்தது மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சி மாற்றம் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க-வினர் கூறிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்ததது பா.ஜ.க. அதேபாணியில் தற்போது மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியை கவிழ்த்துள்ளது. அடுத்ததாக மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு காணாமல் போய்விட்டது. மம்தா பானர்ஜிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேதான் போட்டி என்ற அளவுக்கு தேர்தல் களம் மாறிவிட்டது. தேர்தலுக்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றி அதிர்ச்சி கொடுக்க திட்டமிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்களை கவரும் வகையில் தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜ.க எம்.பி-க்களுடன் மோடி, அமித்ஷா, நட்டா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி ஒன்றுமே இல்லை, கட்சி கலகலத்துவிட்டது என்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை, திட்டங்கள் மூலம் மேற்கு வங்கத்தை பிடித்துவிடலாம் என்று பா.ஜ.க-வினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், கர்நாடகா, மத்திய பிரதேச பாணியைப் பின்பற்றி மகாராஷ்டிராவிலும் ஆட்சியை பிடிக்க வலைவீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிலிருந்து அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை இழுத்து சிவசேனா ஆட்சி கவிழ்த்துவிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜ.க செயல்திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி புறவாசல் வழியாக பதவிக்கு வருவதில் என்ன ஆர்வமோ தெரியவில்லை என்று பா.ஜ.க-வை பலரும் விமர்சித்து வருகின்றனர்.