×

அசுரவேகத்தில் சென்ற இரண்டு பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி பலி !

இரண்டு பேருந்துகளும், அசுரர் வேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து திருப்பதி அருகே உள்ள காசிபெண்ட்லாவில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இன்று அதிகாலை விஜயவாடாவில் இருந்து குப்பம் பகுதியை நோக்கி ஒரு அரசு சொகுசு பேருந்து சென்றுள்ளது. மற்றொரு பேருந்து சபரி மலையில் இருந்து தெலுங்கானாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளும், அசுரர் வேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து திருப்பதி அருகே உள்ள காசிபெண்ட்லாவில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த
 

இரண்டு பேருந்துகளும், அசுரர் வேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து திருப்பதி அருகே உள்ள காசிபெண்ட்லாவில் நேருக்கு நேர் மோதியுள்ளது. 

இன்று அதிகாலை விஜயவாடாவில் இருந்து குப்பம் பகுதியை நோக்கி ஒரு அரசு சொகுசு பேருந்து சென்றுள்ளது. மற்றொரு பேருந்து சபரி மலையில் இருந்து தெலுங்கானாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளது. இந்த இரண்டு பேருந்துகளும், அசுரர் வேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து திருப்பதி அருகே உள்ள காசிபெண்ட்லாவில் நேருக்கு நேர் மோதியுள்ளது. 
 

இந்த கோர விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். பேருந்தில் பயணித்த 36 பேருக்கு இதில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு பேருந்துகளும் அதிவேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்தது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிந்து கொண்ட போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.