×

சொமேட்டா டெலிவரி பாயுடன் மோதி மூக்குடைபட்ட இளம்பெண் #zomatodeliveryboy

பெங்களூருவில் சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தில் ஹித்தேஷா என்ற பெண் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். 45 முதல் 50 நிமிடத்தில் உணவு வந்துவிடும் என்று சொல்லப்பட்ட நிலையில், கொஞ்சம் தாமதமாக உணவுவந்திருக்கிறது. அதற்குள் டென்ஷன் ஆன ஹித்தேஷா, உணவு ஆர்டடை கேன்சல் செய்துவிட்டார். அந்த நேரம் பார்த்து சொமேட்டா டெலிவரிபாய் காமராஜ், உணவுடன் வர, அந்த உணவினை வாங்கிக்கொண்டு, லேட்டாக வந்ததால் கேன்சல் செய்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஹித்தேஷா. அப்படி என்றால் உணவை ரிட்டர்ன் செய்துவிடுங்கள்
 

பெங்களூருவில் சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தில் ஹித்தேஷா என்ற பெண் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். 45 முதல் 50 நிமிடத்தில் உணவு வந்துவிடும் என்று சொல்லப்பட்ட நிலையில், கொஞ்சம் தாமதமாக உணவுவந்திருக்கிறது. அதற்குள் டென்ஷன் ஆன ஹித்தேஷா, உணவு ஆர்டடை கேன்சல் செய்துவிட்டார். அந்த நேரம் பார்த்து சொமேட்டா டெலிவரிபாய் காமராஜ், உணவுடன் வர, அந்த உணவினை வாங்கிக்கொண்டு, லேட்டாக வந்ததால் கேன்சல் செய்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஹித்தேஷா.

அப்படி என்றால் உணவை ரிட்டர்ன் செய்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார் காமராஜ். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது ஆத்திரத்தில், செருப்பை எடுத்து டெலிவபாய் காமராஜை அடிக்க முற்பட, அந்த இளைஞர் செருப்பை வேகமாக தட்டிவிட முயன்றிருக்கிறார். இதில், ஹித்தேஷாவின் கையில் இருந்த மோதிரம், அவருடையை மூக்கிலேயே பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

இதனால், ஆவேசமாகி, சொமேட்டா டெலிவரி பாய் அடித்து மூக்கை உடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் ஹித்தேஷா. இந்த சம்பவம் இணையங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தன் கை விரல் பட்டுத்தான் மூக்கில் ரத்தம் வந்ததை சொல்லி இருக்கிறார் ஹித்தேஷா. ஆனால், இந்த சம்பவம் தொடரபக வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சொமேட்டோ நிறுவன தலைவர், ‘’சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாததால், யார் மேல்குற்றம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இப்போதைக்கு இருவரையும் ஒரே கோணத்தில்தான் வைத்துபார்க்க வேண்டும். ஹித்தேஷாவின் மருத்துவ செலவுகளை சொமேட்டே நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். அதே நேரத்தில், டெலிவர்பாய் காமராஜ் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளார். வழக்கு முடியும் வரை அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனாலும், அவருக்கு உரிய சம்பளம் கொடுக்கப்படும். அவருக்கு உண்டாகும் வழக்கு செலவினையும் சொமேட்டா நிறுவனமே ஏற்கும்’’ என்று நியாயமாக தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக #zomatodeliveryboy என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.