×

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமனம்

 

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமித்து காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. மாநில காங்கரஸ் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ரராஜு நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பினார். இந்நிலையில்  சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மகளும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சகோதரியுமான  ஒய்.எஸ்.ஷர்மிளாகாங்கிரஸ் கட்சியில்  இணைந்தார்.  கர்நாடகா, தெலுங்கானா வெற்றியை போன்று  தனது கட்சி பலத்தை கொண்டு வந்து பழையபடி காங்கிரஸ் ஆட்சியை ஆந்திராவில் கொண்டு வர காங்கிரஸ் தயாராகி வருகிறது.  இதற்கு ஆந்திர அரசியலில் அண்ணன் ஜெகன் மோகன் ஆட்சியை அவரது தங்கை ஒய்எஸ் ஷர்மியை பயன்படுத்தி விழ்த்த திட்டமிட்டுள்ளது. 

இதனையடுத்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ஷர்மிளாவை நியமித்து காங்கிரஸ் கட்சியில் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் முதல்வர்  ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மீதான அனுதாபம் மற்றும் அவருக்கு உண்டான ஆதரவு வாக்குகளை ஷர்மிளா மூலம்  காங்கிரஸ் கட்சிக்கு வரும் என்றும் அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில பிரிவினையால் ஜெகன் மோகன் கட்சியில் இணைந்து தற்போது அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள் மூத்த நிர்வாகிகளாக உள்ளவர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை தொடங்க உள்ளனர். 

ஏற்கனவே சிலர் காங்கிரஸ் உடன் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்னும் சில மாதங்களில் ஆந்திராவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஷர்மிளா தலைவராக பொறுப்பெற்கும் ஷர்மிளாவை எவ்வாறு அண்ணன் எதிர்த்து கட்சியை செயல்படுத்துவார் என்பதும் இதனால் தெலுங்கு தேச கட்சிக்கு பலம் சேர்க்குமா என்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.