×

ChatGPT உதவியுடன் செருப்பை கண்டுபிடித்த இளைஞர்

 

ChatGPT உதவியுடன் கோயிலுக்கு வெளியே குவிந்து கிடந்த செருப்புகளில் இருந்து தனது செருப்பை கண்டுபிடித்த இளைஞரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனியில் உள்ள ஒரு கோயிலுக்கு வெளியே குவிந்த கிடந்த செருப்புகளில் இருந்து, இளைஞர் ஒருவர் தனது செருப்பை CHATGPT உதவியுடன் கண்டுபிடித்துள்ளார். கிட்டத்தட்ட 1000 செருப்புகளில் இருந்து தனது செருப்பை கண்டுபிடித்த சம்பவத்தை பதிவுசெய்து ஷுபாங் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

சுபாங் போர்கர் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அந்த வீடியோவில், நெரிசலான ஒரு பகுதியில் ஒன்றாக குவித்து வைக்கப்பட்டிருந்த காலணிகள் மற்றும் செருப்புகளிலிருந்து அவர் தனது காலணிகளில் ஒன்றை எடுக்க வேண்டியிருந்தது. இறுதியில் அவர் உதவிக்காக ChatGPT-ஐ நாட முடிவு செய்தார் . அந்த காலணியைப் புகைப்படம் எடுத்த பிறகு, காணாமல் போன தனது காலணியை காட்டுமாறு அந்த AI ChatGPT-யிடம் கேட்டார். இதன்மூலம் தனது காலணியை எழுதில் கண்டுபிடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.