×

கொரோனா சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் உயிருக்குப் போராடிய இளம் மருத்துவர்; உதவிக்கரம் நீட்டிய மூத்த மருத்துவர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜீந்தர் சவுத்ரி என்பவரது மகன் ஜோகிந்தர்(27). இவர் டெல்லி பாபா சாகேப் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் ஜுனியர் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார். பணியின் போது இவருக்கு கொரோனா வைரஸ் பரவியதால், இவர் கடந்த 27 ஆம் தேதி சர் கங்காராம் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான இவரது தந்தை, சிகிச்சைக்குப் பணம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். ஜோகிந்தர் கொரோனா சிகிச்சையைத் தொடர பணம் இல்லாமல் உயிருக்குப்
 

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜீந்தர் சவுத்ரி என்பவரது மகன் ஜோகிந்தர்(27). இவர் டெல்லி பாபா சாகேப் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் ஜுனியர் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார். பணியின் போது இவருக்கு கொரோனா வைரஸ் பரவியதால், இவர் கடந்த 27 ஆம் தேதி சர் கங்காராம் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான இவரது தந்தை, சிகிச்சைக்குப் பணம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். ஜோகிந்தர் கொரோனா சிகிச்சையைத் தொடர பணம் இல்லாமல் உயிருக்குப் போராடுவதை அறிந்த அம்பேத்கர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சேர்ந்து 3 லட்சம் ரூபாய் வரை திரட்டி உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

இது குறித்துப் பேசிய மூத்த மருத்துவர்கள், ஜோகிந்தரை இதுவரை சந்தித்தது கூட இல்லை, ஆனால் அவர் உயிருக்குப் போராடுவதை எண்ணி மனம் பொறுக்காமல் நிதி திரட்டியதாகவும் இது போன்ற நெருக்கடிக் காலம் தான் சகோதரத்துவத்துடன் இணைப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், ஜோகிந்தரை பற்றி டெல்லி முதல்வருக்கும் சர்கங்காராம் மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்து விட்டதாகவும் அவர்கள் உதவி செய்வதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர். உயிருக்குப் போராடிய இளம் மருத்துவரை மூத்த மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.