×

இன்று முதல் மாநிலத்துக்குள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்… பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் (ஏப்ரல் 1) மாநிலத்துக்குள் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதியன்று அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மாநிலத்துக்குள் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அறிவித்தார். இதனால் 1.31 கோடி பெண்கள் மற்றும் இளைஞிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில்
 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் (ஏப்ரல் 1) மாநிலத்துக்குள் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதியன்று அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மாநிலத்துக்குள் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அறிவித்தார். இதனால் 1.31 கோடி பெண்கள் மற்றும் இளைஞிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

இந்நிலையில் நேற்று பஞ்சாப் அமைச்சரவை, மாநிலத்துக்குள் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி, பஞ்சாப் சாலை போக்குவரத்து கழகம், பஞ்சாப சாலை பஸ்கள், உள்ளாட்சி அமைப்புகள் இயக்கும் நகர பஸ் சேவை பேருந்துகள் உள்பட அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் ஏப்ரல் 1 முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்

இந்த வசதியை பயன்படுத்த, ஆதார், வாக்காளர் அட்டை உள்பட பஞ்சாப் மாநிலத்தவர் என்பதற்காக எந்தவொரு அடையாள சான்றுகள் அவசியம். அதேசமயம், அரசுக்கு சொந்தமான ஏ.சி. பஸ்கள், வால்வோ பஸ்கள் மற்றும் எச்.வி.ஏ.சி பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. அதாவது இந்த பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியாது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால், அதிக போக்குவரத்து செலவு காரணமாக படிப்பை பாதியில் பெண்கள் கைவிடுவது குறைவதோடு, பணிபுரியும் பெண்களுக்கும் இடர்பாட்டை குறைக்கும் என்று பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.