×

காக்கி சட்டைக்குள்ளும் ஈரம்: ஆதரவற்றவரின் சடலத்தை 2 கிமீ தோளில் தூக்கி சென்ற பெண் எஸ்ஐ!

ஆதரவற்ற முதியவர் ஒருவரின் சடலத்தை 2 கிமீ தூரம் தோளிலே சுமந்துசென்று இறுதி மரியாதை செய்த பெண் காவல் உதவி ஆய்வாளர் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். காவல் துறையினர் அராஜகமாக நடந்துகொள்வார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அவர்களுக்கும் மனிதநேயம் இருக்கிறது என்பதை ஒருசில நிகழ்வுகள் நமக்க உணர்த்தும். அப்படியொரு நிகழ்வு தான் ஆந்திராவில் நிகழ்ந்திருக்கிறது. கல்லுக்குள் ஈரம் போல காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அதிவிக்கொத்துரு கிராமத்தில் உறவினர்கள் இல்லாமல் தனியாக வாழ்ந்துவந்த முதியவர்
 

ஆதரவற்ற முதியவர் ஒருவரின் சடலத்தை 2 கிமீ தூரம் தோளிலே சுமந்துசென்று இறுதி மரியாதை செய்த பெண் காவல் உதவி ஆய்வாளர் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

காவல் துறையினர் அராஜகமாக நடந்துகொள்வார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அவர்களுக்கும் மனிதநேயம் இருக்கிறது என்பதை ஒருசில நிகழ்வுகள் நமக்க உணர்த்தும். அப்படியொரு நிகழ்வு தான் ஆந்திராவில் நிகழ்ந்திருக்கிறது. கல்லுக்குள் ஈரம் போல காக்கிக்குள்ளும் ஈரம் இருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அதிவிக்கொத்துரு கிராமத்தில் உறவினர்கள் இல்லாமல் தனியாக வாழ்ந்துவந்த முதியவர் ஒருவர் வயல்வெளியில் இறந்துகிடந்துள்ளார். அவர் எப்போது இறந்தார் என்ற தகவல் தெரியவில்லை. துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதியே சென்றவர்கள் காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளனர். இதையடுத்து பெண் காவல் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா அங்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சடலத்தைத் தூக்கிச் செல்ல கிராமத்தாரின் உதவியை நாடியிருக்கிறார். முதியவரின் சடலம் அழுகும் நிலையில் இருந்ததால் யாரும் பக்கத்தில் செல்லவில்லை. அதனால் அவர்கள் உதவ முன்வரவில்லை. உடனே ஆதரவற்றவர்களுக்கு இறுதி மரியாதை செய்யும் தொண்டு நிறுவனத்தை அழைத்துப் பேசியிருக்கிறார். சடலம் கிடந்த இடத்திற்கும் சாலை இருக்குமிடத்திற்கும் 2 கிமீ தூரம் செல்ல வேண்டும். ஊர் மக்கள் உதவிக்கு வராததால் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் அந்தச் சடலத்தைத் தோளில் சுமந்துகொண்டு 2 கிமீ வந்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் முறைப்படி இறுதி மரியாதையும் அவர் செய்திருக்கிறார். அவரின் இந்த மனிதநேய செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அவர் சடலத்தைத் தூக்கிவரும் வீடியோ பதிவை வெளியிட்டு ஆந்திர காவல் துறை சிரிஷாவை பாராட்டியிருக்கிறது. இதுதொடர்பாக சிரிஷாவிடம் கேட்டால், நான் என் கடமையைத் தானே செய்கிறேன்; பெரிதாகப் பேச எதுவுமில்லை என கூலாக பதிலளித்தார். “நேரமும், தேவையும் ஏற்படும்போது தயக்கமின்றி சேவை செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டுள்ளது. இது காவல் பணியை விட மேலானது. இதுபோன்ற என் சேவைகள் தொடரும்” என்று கூறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.