குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி பெண்ணை மிரட்டி வன்கொடுமை- இளைஞரை வீட்டுக்குள் அழைத்து கதையை முடித்த தம்பதி
குஜராத்தில் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஹர்திக். இவர் கல்லூரியில் படித்துவருகிறார். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன், ஹர்திக் வீட்டருகே வசிக்கும் திருமணமான பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த வீடியோவை வைத்து மிரட்டி, அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ஹர்திக். வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என அஞ்சி அப்பெண்ணும், ஹர்திக்கின் கோரிக்கைகளுக்கு இணங்கியதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கணவர் மின்விசிறி பழுதுபார்ப்பவர். இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஒருநாள் ஹர்திக்குடன் மனைவி தொலைப்பேசியில் பேசுவதை கணவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மனைவி நடந்ததை தன் கணவனிடம் கூறியுள்ளார். அப்பெண்ணின் வீட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் ஹர்திக் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவன், ஹர்திக்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஜூலை 11ஆம் தேதி தங்களது 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு ஹர்திக்கை அப்பெண் அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த ஹர்திக்கை (20) கணவனும் மனைவியும் சேர்ந்து கொலை செய்து, அவரது செல்போனை உடைத்து சாலையில் வீசியுள்ளனர். தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.