×

சும்மா சும்மா அம்மா வீட்டுக்கு போன மனைவி -அருவாளை எடுத்த கணவன் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

அடிக்கடி அம்மா வீட்டிற்கு போன மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் பிபார்லி கிராமத்தில் 40 வயதான பீல் என்பவர் தன்னுடைய 35 வயதான நீலம் என்ற மனைவியோடு வசித்து வந்தார்.இதற்கிடையே அந்த மனைவி நீலம் அடிக்கடி ஜோத்பூரில் உள்ள சூர்சாகர் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவார் . இதனால் அந்த கணவனுக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது .அவர்
 


அடிக்கடி அம்மா வீட்டிற்கு போன மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் பிபார்லி கிராமத்தில் 40 வயதான பீல் என்பவர் தன்னுடைய 35 வயதான நீலம் என்ற மனைவியோடு வசித்து வந்தார்.இதற்கிடையே அந்த மனைவி நீலம் அடிக்கடி ஜோத்பூரில் உள்ள சூர்சாகர் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவார் . இதனால் அந்த கணவனுக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது .அவர் ஒருவேளை அந்த பகுதியில் வேறு யாருடனாவது கள்ள தொடர்பு வைத்துள்ளாரோ என்று சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி சண்டை போட்டார் .
இதனால் அவர் நிரந்தரமாகவே அவரின் அம்மா வீட்டிலேயே தங்கிவிட்டார் .இதனால் கடும் கோபமுற்ற அந்த கணவன் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அருவாளை எடுத்து கொண்டு அவரின் மாமியார் வீட்டிற்கு போனார் .அப்போது அங்கேயிருந்த மனைவியை மிரட்டி வீட்டிற்கு கூட்டி வந்தார் .பின்னர் வீட்டிற்கு வந்த மனைவியை அந்த அருவாளால் வெட்டி சாய்த்தார் .இந்த தாக்குதலில் அந்த மனைவி நீலம் சம்பவ இடத்திலேயே இறந்தார் .
மறுநாள் பொழுது விடிந்ததும் அந்த கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த ரத்த கரை படிந்த அருவாளோடு சரணடைந்தார் .போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தார்கள் .