×

ஊரடங்கால் வறுமை ! பெற்ற குழந்தையை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கொடுமை !

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதி ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக தங்களது இரண்டரை மாத குழந்தையை உறவினர்களுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. குழந்தையின் தாய் வீட்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். தந்தை தினசரி கூலியாக இருக்கிறார். கொடிய வைரஸ் தொற்று பரவுவதைத் தணிக்க நாடு தழுவிய ஊரடங்க விதிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ஹவுராவில் அமைந்துள்ள அவரது உறவினர்களின் வீட்டில் பொலிஸ் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு
 

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதி ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக தங்களது இரண்டரை மாத குழந்தையை உறவினர்களுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. குழந்தையின் தாய் வீட்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். தந்தை தினசரி கூலியாக இருக்கிறார். கொடிய வைரஸ் தொற்று பரவுவதைத் தணிக்க நாடு தழுவிய ஊரடங்க விதிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருந்துள்ளனர்.


இந்நிலையில் ஹவுராவில் அமைந்துள்ள அவரது உறவினர்களின் வீட்டில் பொலிஸ் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனமான சைல்ட்லைன் உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர், பாபன் தாரா மற்றும் தபாசி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ஹவுராவில் உள்ள உறவினர்களின் வீட்டில் இருந்து குழந்தை மீட்கப்பட்டதாகக் கூறினர். விசாரணையில், தம்பதியினர் தங்கள் மகளை ரூ .3,000 க்கு விற்றிருப்பது தெரியவந்தது. நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
தபாசி ஒரு வீட்டு உதவியாக பணியாற்றினார். COVID-19 நோய்த்தொற்று பரவுவதாக அஞ்சி பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டு வேலைகள் செய்பவர்களுக்கு பணி வழங்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக அவர் வேலையில்லாமல் இருந்தார். அவரது கணவர் பாப்பன் தினசரி கூலியாக வேலை செய்வார், அவரும் வேலையில்லாமல் இருந்தார். அவர்கள் குழந்தைக்கு உணவளிக்க போராடி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளுக்காக அரசு நடத்தும் வீட்டிற்கு அனுப்பப்படும் என்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சந்தீப் குமார் போஸ் தெரிவித்தார்