×

நண்பன் பட பாணியில் வீடியோ காலில் மருத்துவரின் ஆலோசனை பெற்று பெண்ணுக்கு பிரசவம்!

‘நண்பன்’ படத்தில், பிரசவ வலியால் துடித்த நடிகையின் சகோதரிக்கு நடிகை இலியானா வீடியோ கால் மூலம் நடிகர் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதேபோல கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹனகல் டவுன் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி வாசவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் அலறிய வாசவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது கணவர் வாகனத்தை தேடி சென்றார். ஆனால் ஞாயிறு ஊரடங்கால் வாகனம் ஏற்பாடு செய்யமுடியவில்லை.
 

‘நண்பன்’ படத்தில், பிரசவ வலியால் துடித்த நடிகையின் சகோதரிக்கு நடிகை இலியானா வீடியோ கால் மூலம் நடிகர் விஜய்க்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதேபோல கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஹனகல் டவுன் பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி வாசவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் அலறிய வாசவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது கணவர் வாகனத்தை தேடி சென்றார். ஆனால் ஞாயிறு ஊரடங்கால் வாகனம் ஏற்பாடு செய்யமுடியவில்லை.

வாசவியின் உறவுக்கார பெண் ஒருவர், உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் பிரியங்கா மண்டகி வீடியோ கால் மூலம் பிரசவம் குறித்த அறிவுரைகளை வழங்கினார். அதனை கேட்டு, வாசவியின் உறவுக்கார பெண்களான மதுலிகா தேசாய், அங்கிதா, ஜோதி, விஜயலட்சுமி, மாதுரி, முக்தா, சிவலீலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் வாசவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனைதொடர்ந்து நேற்று முன் தினம் வாசவி மற்றும் குழந்தை ஹனகல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.