×

பெருந்தொற்று கடவுள் செயல் என்றால், முந்தைய பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம்? – நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பது கடவுளின் செயல் என்றால், அதற்கு முன்பு 2018-19, 2019-20 நிதியாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். यदि महामारी ईश्वर की करतूत है, तो हम महामारी के पहले 2017-18, 2018-19 और 2019-20 के दौरान अर्थव्यवस्था के कुप्रबंधन का वर्णन कैसे करेंगे? क्या ईश्वर
 


கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பது கடவுளின் செயல் என்றால், அதற்கு முன்பு 2018-19, 2019-20 நிதியாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


கொரோனா காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது கடவுளின் செயல் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது என்று சிலர் கூற, ஒருசிலர் தொடர்ந்து சில ஆண்டுகளாக பொருளாதாரம் தடுமாறி வருவதற்கும் கடவுள்தான் காரணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.


அதில், “பெருந்தொற்று என்பது கடவுளின் செயல் என்று விவரித்தால், பெருந்தொற்றுக்கு முன்னதாக 2017-18, 2018-19, 2019-20ம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமாக கையாளப்பட்டதற்கு யார் காரணம்? கடவுளின் தூதுவரான நிதித்துறை அமைச்சர் தயவு செய்து பதில் சொல்வாரா?


ஜி.எஸ்.டி இழப்பை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு மோடி அரசாங்கம் வழங்கியிருக்கும் இரண்டு வாய்ப்புகள் ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை.
இரண்டு வாய்ப்புகளில் முதலாவது, தங்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் இழப்பீடு செஸ் அடிப்படையில் சந்தையில் கடன் பெற்றுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் நிதிச் சுமை முழுக்க முழுக்க மாநில அரசின் தலையில் விழும்.

economic depression


இரண்டாவது வாய்ப்பு, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். இதுவும் சந்தையில் வாங்கும் கடனைப் போன்றதுதான். ஆனால் பெயர் மட்டுமே வேறு. இதிலும் மொத்த நிதி சுமையும் மாநில அரசுகள் தலையில் விழும்.


மத்திய அரசு முழுக்க முழுக்க நிதி பொறுப்புகளிலிருந்து தன்னை மறைத்துக்கொள்கிறது. இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை மிக நேரடியாக மீறுவதாகும்” என்று கூறியுள்ளார்.