×

“ஆன்லைன் கல்வியில் ஆபாசம்” -பத்தாம் வகுப்பு வாட்ஸ் அப் க்ரூப்பில் பலான படங்கள்

ஆன்லைனில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாடம் படிக்கும்போது திடீரென ஆபாச படங்கள் அந்த வாட்ஸ் அப் க்ரூப்பில் வந்து விழுந்ததால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தார்கள் இப்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை படித்து வருகிறார்கள் .இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பாகபத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் உயிரியல் படிப்புக்கான வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு மாணவர்கள் படித்து வந்தார்கள் .அப்போது அந்த குழுவில் திடீரென நிறைய ஆபாச
 

ஆன்லைனில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாடம் படிக்கும்போது திடீரென ஆபாச படங்கள் அந்த வாட்ஸ் அப் க்ரூப்பில் வந்து விழுந்ததால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்

இப்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைனில் பாடங்களை படித்து வருகிறார்கள் .இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் பாகபத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் உயிரியல் படிப்புக்கான வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு மாணவர்கள் படித்து வந்தார்கள் .அப்போது அந்த குழுவில் திடீரென நிறைய ஆபாச படங்கள் வெளிவந்தது ,மேலும் அந்த படங்களை அனுப்பிய நபர் சில மாணவ மாணவிகளின் போட்டோக்களையும் கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தார்கள் .இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களும் ,பெற்றோர்களும் அங்குள்ள கல்வி நிலையத்தில் புகார் கொடுத்தார்கள் .
அந்த பள்ளி அந்த வாட்ஸ் அப் குழுவை ஆராய்ந்தபோது அது போலியாக அந்த பள்ளி உயிரியல் ஆசிரியர் போட்டோ கொண்டு சர்வதேச எண்ணிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் அந்த குழுவின் அட்மின் சர்வதேச எண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதையும் ,அதில் அவர்களின் பள்ளியில் உயிரியல் ஆசிரியரின் போட்டோவை ப்ரொபைல் படமாக வைத்துள்ளதையும் கண்டு அதிர்ச்சியடைந்து இந்த மோசடி வேலைகளை செய்யும் நபரை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள் .இந்த மாதிரி மாணவர்களின் கல்வியை கெடுக்கும் கூட்டத்தை விரைவில் பிடிப்போமென்று அவர்கள் உறுதியளித்த பிறகு மாணவர்கள் படிப்பை தொடர்ந்தார்கள்.