×

ராணுவ பலத்தில் இந்தியாவின் இடம் என்ன ?

‘குளோபல் பையர் பவர்’ கணிப்பின்படி, உலக அளவில் ராணுவ பலத்தில் இந்தியா 4- வது இடத்தில் உள்ளது.உலகின் ராணுவ பலம் வாய்ந்த முதல் 10 நாடுகளில், அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா 2 வது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் சீனாவும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.5 வதாக பிரிட்டன், 6 வது இடத்தில் துருக்கி, 7வது மற்றும் 8 வது இடங்களில் தென் கொரியா, பிரான்ஸ் நாடுகள் உள்ளன. ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் 9 மற்றும்
 

‘குளோபல் பையர் பவர்’ கணிப்பின்படி, உலக அளவில் ராணுவ பலத்தில் இந்தியா 4- வது இடத்தில் உள்ளது.
உலகின் ராணுவ பலம் வாய்ந்த முதல் 10 நாடுகளில், அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா 2 வது இடத்திலும் உள்ளது.


மூன்றாவது இடத்தில் சீனாவும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
5 வதாக பிரிட்டன், 6 வது இடத்தில் துருக்கி, 7வது மற்றும் 8 வது இடங்களில் தென் கொரியா, பிரான்ஸ் நாடுகள் உள்ளன. ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் 9 மற்றும் 10 வது இடத்தில் உள்ளன.

கடற்படை
கடற்படையைப் பொறுத்தவரை இந்திய ராணுவம் உலகில் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், 2- வது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்திய கடற்படையில் மொத்தம் 214 கப்பல்கள் உள்ளன.

அணு ஏவுகணை
ஏ.சி.ஏ தகவலின் படி, அணு ஏவுகனை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 130 அணு ஏவுணைகள் உள்ளன.
குறைந்த பட்ச தொலைவுக்கான ஏவுகணையாக 150 கி.மீ பாயும் ஏவுகணையும், அதிகபட்ச தொலைவு தாக்குதல் நடத்தும் ஏவுகணையாக 8000 கி.மீ பாயும் ஏவுகணையும் இந்தியா வைத்துள்ளது.

ராணுவத்தில் 21.40 லட்சம் வீரர்கள் உள்ளனர். 4,426 போர் டாங்கிகள், 5,681 கவச வாகனங்கள், 290 இலகு ரக பீரங்கிகள், 292 ராக்கெட் ஏவும் லாஞ்சர்கள் உள்ளன.

விமானப்படை
இந்தியாவிடம் மொத்தம் 2216 விமானங்கள், 323 போர் விமானங்கள், 329 பல் உபயோக விமானங்கள், 220 தாக்குதல் ரக விமானங்கள், 725 ஹெலிகாப்டர்கள், ஆளில்லா ஹெரன் ரக விமானங்கள், விண்ணிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என நவீன வசதிகளையும் இந்திய விமானப்படை கொண்டுள்ளது – போஸ்