CJP உடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?- ஜே.பி.நட்டா விளக்கம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி நட்டா, ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டுள்ளோம். நாளை மீண்டும் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். நீட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளோம். CJP தரப்பினர் 3 முக்கிய கோரிக்கைகளையு, தேர்வு சீர்த்திருத்தம் தொடர்பாக 5 பரிந்துரைகளையும் முன்வைத்தனர். அவை குறித்து அரசின் சார்பில் ஆலோசனை நடத்தவுள்ளோம். நாளை பிற்பகல் CJP பிரதிநிதிகளை சந்தித்து அரசின் நிலைபாடு மற்றும் முடிவுகளை தெரிவிப்போம்” என்றார்.