×

“அம்பதாயிரம் கொடுத்தா உங்கப்பா உடம்ப பாக்கலாம்” -கொரானாவால் இறந்த தந்தை உடலை பார்க்க பேரம் பேசிய மருத்துவமனை .

நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் ,அதனால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது .இதை வைத்து பல தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக பல புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளது .ஒரு ஹாஸ்ப்பிட்டல் 7 லட்சம் பில் போட்டதாகவும் ,இன்னொரு ஹாஸ்ப்பிடல் 16 லட்சம் பில் போட்டதாகவும் புகார்கள் குவிந்த வண்ணமிருப்பதால் அரசு இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது . மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு
 

 

நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் ,அதனால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது .இதை வைத்து பல தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக பல புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் உள்ளது .ஒரு ஹாஸ்ப்பிட்டல் 7 லட்சம் பில் போட்டதாகவும் ,இன்னொரு ஹாஸ்ப்பிடல் 16 லட்சம் பில் போட்டதாகவும் புகார்கள் குவிந்த வண்ணமிருப்பதால் அரசு இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது .


மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஹரி குப்தா என்பவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார் .பிறகு அந்த மருத்துவமனை அளித்த தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவர் குணமாகாததால் கடந்த சனிக்கிழமை இரவு 1 மணிக்கு மரணமடைந்தார் .இதனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் அவரின் மகனுக்கு போன் செய்து உங்கள் தந்தை இறந்து விட்டார் உடனே வாருங்கள் என்று கூறியுள்ளது .
இதனால் அவரின் மகன் சாகர் குப்தா அன்று இரவே அந்த மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய தந்தையின் உடலை பார்க்க விரும்பினார் ஆனால் அந்த ஹாஸ்பிடல் நிர்வாகமோ, உங்கள் தந்தையின் உடலை பார்க்க வேண்டுமானால் உடனடியாக 51000 ரூபாய் பணம் கட்டுங்கள் என்றது .இதனால் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு உடனே தன்னுடைய தந்தையை பார்க்க அந்த மகன் 51000 ரூபாய் பணத்தை கட்டினார் .பிறகு அவரின் உடலை சுகாதார பணியாளர்களின் ஆலோசனைப்படி அடக்கம் செய்தார்கள் .