இணையத்தில் வைரலாகும் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண பத்திரிகை
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் இந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் இந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணம் மிகவும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடத்தப்பட உள்ளது. திருமண வரவேற்பு விழா மார்ச் 4ல் ஹைதராபாத்திலுள்ள பிரபல Taj Krishna ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகிவருகிறது.