கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!
கேரளாவின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் இன்று (ஜூலை 21, 2025) காலமானார். அவருக்கு வயது 101.
கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். இவருக்கு கடந்த மாதம் 23 அன்று இதய பாதிப்பு ஏற்பட்டதையடுத்து,கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (21.07.2025) உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அச்சுதானந்தன் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கட்சியின் பொலீட்பீரோ உறுப்பினராக இருந்தவர் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.
மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல், இன்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள தர்பார் அரங்கில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. நாளை காலை முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான ஆழப்புலாவுக்கு உடல் எடுத்து செல்லப்படவுள்ளது.