×

கடந்த வாரம் முதலிரவு! இந்த வாரம் பூஜை... ரயில்களில் நடக்கும் கசமுசா?

 

கடந்தவாரம் நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தேனிலவு சென்ற புதுமணத் தம்பதி, தங்களது முதல் வகுப்பு ஏசி பெட்டியை ஒரு தனியார் ஆன்லைன் டெக்கரேட்டர் மூலம் முதலிரவு அறை போல மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் ஆடம்பரமாக அலங்கரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தேனிலவு சென்ற புதுமணத் தம்பதி, தங்களது முதல் வகுப்பு ஏசி பெட்டியை ஒரு தனியார் ஆன்லைன் டெக்கரேட்டர் மூலம் முதலிரவு அறை போல மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் ஆடம்பரமாக அலங்கரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரயில்வே நிர்வாகத்தின் எந்தவொரு முன் அனுமதியும் இன்றி, ஒருவர் ரயில் பெட்டிக்குள் நுழைந்து அலங்காரம் செய்தது கடுமையான பாதுகாப்பு குறைபாடு மற்றும் விதிமீறல் என தெற்கு மத்திய ரயில்வே சுட்டிக்காட்டியது. இந்த அலட்சியத்திற்காக, ரயிலில் பணியில் இருந்த சம்பந்தப்பட்ட பயணச்சீட்டு பரிசோதகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ट्रेन में नमाज़ पढ़ने पर भावनाएं आहत हो जाती हैं...

ट्रेन के केबिन में हनीमून का सरप्राइज देने पर संस्कृति खतरे में आ जाती है और TTE सस्पेंड हो जाता है...

लेकिन जब भारतीय रेलवे के एक वीआईपी सैलून कोच (Saloon Coach) के अंदर बकायदा पंडितों को बुलाकर, चलती ट्रेन में पूरा तामझाम… pic.twitter.com/7use0bmfde

— Sudhanshu Yadav (@SocialistSpirit) July 12, 2026


இந்நிலையில் தற்போது ஓடும் ரயிலில் பூசாரி ஒருவர் மதச் சடங்கு நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வடக்கு ரயில்வே, அந்த மதச் சடங்கு சாதாரண பயணிகள் பயணிக்கும் ரயில் பெட்டியில் நடைபெறவில்லை என்றும், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்காக பயன்படுத்தப்படும் ஆடம்பர வசதிகள் கொண்ட சிறப்பு ரயில் பெட்டியில்தான் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.