×

கேரளாவில் வைரலான வீடியோ  - பெண் கைது

 

தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, தீபக் என்பவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில், பேருந்தில் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் ஒருவர் தீபக் என்பவர் மீது குற்றம் சாட்டி, அது தொடர்பான காணொளியை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், தீபக் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை என மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின், அந்த பெண் மீது தான் தவறு இருப்பது தெரியவந்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், சற்றுமுன் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு பஸ்ஸில் வீடியோ எடுத்து வைரல் ஆக்கியதன் மூலம் தீபக் என்ற ஆண் தற்கொலை செய்து கொண்ட விவாகரத்தில் அந்தப் பெண் "ஷிம்ஜிதா முஸ்தபா"  மீது ஜாமினில் வெளி வராத பிரிவின் கீழ் போலீஸ் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளது.