டெல்லியில் நடந்த சுவாரஸ்யம்! ராகுல் வீட்டு பணிப்பெண்ணுடன் விஜய்
முதலமைச்சர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது வீட்டு பணிப்பெண்ணின் நீண்ட நாள் ஆசையை பிரியங்கா காந்தி நிறைவேற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
டெல்லியில் நேற்று (16.11.2026) திங்கட்கிழமை நடைபெற்ற சோனியா காந்தி அவர்களின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி அவர்கள், கடந்த 22 ஆண்டுகளாக தனது இல்லத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை முதலமைச்சர் விஜய்யிடம் அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணுக்கு முதலமைச்சர் விஜய்உடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்தார்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், அப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவரிடம் அன்புடன் நலம் விசாரித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் உடனிருந்தனர்.