குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நிறைவு- 762 வாக்குகள் பதிவு
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பபதிவு நிறைவடைந்தது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பபதிவு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 762 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 12 பேர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணித்துள்ளன. சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, தேர்தல் முடிவு இன்றே அறிவிக்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் ரகசிய வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் யார் என்பது இன்று தெரியவரும்.