☰
×

துணை ஜனாதிபதி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ரெட்டி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி ராதாகிருஷ்ணனும், இண்டி கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல், வரும் செப் - 9.ம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்துவருகிறது. தேர்தல் நடந்த அன்றே மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.