×

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அவசர கடிதம் எழுதியிருக்கிறது. அதனடிப்படையில், மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இதனிடையே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும்
 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அவசர கடிதம் எழுதியிருக்கிறது. அதனடிப்படையில், மாநில அரசுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

இதனிடையே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் எல்லாருக்கும், இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியும் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இணை நோய் இல்லாமல் 45 வயதுக்கு மேற்பட்டோர் எல்லாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியாக இருப்பவர்கள் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.