×

அமலுக்கு வந்த 2வது நாளில்… உ.பி.யில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்மையில் நடந்த முடிந்த உத்தர பிரதேச இடைத்தேர்தலின் போது, திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி கடந்த 24ம் தேதிய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை உத்தர பிரதேசம் சட்டவிரோதமாக மதம்
 

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் நடந்த முடிந்த உத்தர பிரதேச இடைத்தேர்தலின் போது, திருமணத்துக்காக கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி கடந்த 24ம் தேதிய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை உத்தர பிரதேசம் சட்டவிரோதமாக மதம் மாற்றுவதை தடை செய்யும் அவசர சட்டம் 2020 நிறைவேற்றியது. இதனையடுத்து கடந்த 28ம் தேதி இந்த அவசர சட்டத்துக்கு அம்மாநில கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அந்த சட்டம் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம் சட்டவிரோதமாக மதம் மாற்றுவதை தடை செய்யும் அவசர சட்டம் 2020 அமலுக்கு இரண்டாவது நாளிலேயே அந்த சட்டத்தின்கீழ் இளைஞர் ஒருவர் மீது அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கூடுதல் எஸ்.பி. சன்சார் சிங் கூறுகையில், பரேலி மாவட்டத்தில் தியோரனியாவின் ஷரீப்நகர் வசித்து வரும் குற்றம்சாட்டப்பட்ட 22 வயதான உவைஷ் அகமது வேறு மத பெண்ணை திருமணம் செய்து உள்ளார். திருமணத்துக்கு பின் தன்னுடன் வாழ வேண்டுமானால் மதம் மாறும்படி அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

லவ் ஜிஹாத்

மேலும் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அவளது குடும்ப உறுப்பினர்களை அவர் மிரட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். உத்தர பிரதேசம் சட்டவிரோதமாக மதம் மாற்றுவதை தடை செய்யும் அவசர சட்டத்தின்கீழ் அந்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளைஞரை பிடிக்கவும், புகார்தாரரின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்காகவும் போலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.