×

உ.பி. அரசு பேருந்துகளில் இன்று நள்ளிரவு வரை பெண்களுக்கு இலவச பயணம்.. யோகி ஆதித்யநாத் அரசு அறிவிப்பு..

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நாளாக ரக்சா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தன் அன்று பெண்கள் தங்களது சகோதாரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைக்கும் ஆண்களின் கையில் ராக்கி கட்டி தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டு ரக்சா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதியன்று (இன்று) பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம் என கடந்த சனிக்கிழமையன்று முதல்வர்
 

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நாளாக ரக்சா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ரக்சா பந்தன் அன்று பெண்கள் தங்களது சகோதாரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைக்கும் ஆண்களின் கையில் ராக்கி கட்டி தங்களது சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டு ரக்சா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதியன்று (இன்று) பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம் என கடந்த சனிக்கிழமையன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதனைதொடர்ந்து அம்மாநில சாலை போக்குவரத்து கழகம் தனது அனைத்து வகையான பேருந்துகளிலும் இன்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ரக்சா பந்தன் அன்று சமூக விலகல் விதிமுறைகள் உள்பட அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யும்படி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் இன்று நள்ளிரவு வரை பெண்கள் சாலை போக்குவரத்து கழகத்தின் அனைத்து பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்.