பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு
Sep 30, 2026, 19:37 IST
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல் துறை மற்றும் முக்கியத் தொழில்நுட்பங்கள் உட்பட இருதரப்பு கூட்டுறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டதாகப் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த உரையாடலின் போது வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல் துறை, முக்கியமான நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இருதரப்பு கூட்டுறவு முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்தனர்.