×

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறக்க இன்னும் தடை நீடிக்கிறது…. மத்திய அரசு விளக்கம்…

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாத மத்தியில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுன் நடைமுறையில் உள்ளதால் கல்வி நிறுவனங்கள் திறக்கவில்லை. இந்நிலையில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு போக்குவரத்துக்கும் தொடங்கி விட்டது. இந்த
 

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் மாத மத்தியில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுன் நடைமுறையில் உள்ளதால் கல்வி நிறுவனங்கள் திறக்கவில்லை. இந்நிலையில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு போக்குவரத்துக்கும் தொடங்கி விட்டது.

இந்த நிலையில் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி விட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் அது போன்ற எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கு இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய லாக்டவுன் இம்மாதம் 31ம் தேதியோடு முடிவடைகிறது. அதேசமயம் லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.