×

நாலு வயது சிறுமியை கடத்தினார் -தாய் ஓடி வந்து காப்பாற்றனார் -சொந்த மாமாவே பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்டது அம்பலம் ..-வைரலாகும் வீடியோ ..

டெல்லியின் ஷகார்பூர் பகுதியில் புதன்கிழமையன்று ஒரு நாலு வயது சிறுமியை ,அவரின் சொந்த மாமா பணத்துக்காக கடத்த முற்பட்டபோது ,அவரின் தாய் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது .இந்த சிசிடிவி கேமெரா காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது . புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவில் , அந்த சிறுமியை அவரின் மாமா பிட்டூ வீட்டிற்கே வந்து தூக்கி செல்கிறார் ,அப்போது தீரஜ் என்பவர் பைக்கில் வெளியே காத்திருக்கிறார் ,அவர் சிறுமியை தூக்கிக்கொண்டு பைக்கில் உட்காரும்போது அவரின்
 

டெல்லியின் ஷகார்பூர் பகுதியில் புதன்கிழமையன்று ஒரு நாலு வயது சிறுமியை ,அவரின் சொந்த மாமா பணத்துக்காக கடத்த முற்பட்டபோது ,அவரின் தாய் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது .இந்த சிசிடிவி கேமெரா காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது .


புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவில் , அந்த சிறுமியை அவரின் மாமா பிட்டூ வீட்டிற்கே வந்து தூக்கி செல்கிறார் ,அப்போது தீரஜ் என்பவர் பைக்கில் வெளியே காத்திருக்கிறார் ,அவர் சிறுமியை தூக்கிக்கொண்டு பைக்கில் உட்காரும்போது அவரின் தாய் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றுகிறார் .பிறகு இருவரும் அங்கிருந்து பைக்கை விட்டுவிட்டு தப்பி ஓடுகின்றனர் . அந்த பைக் மூலம் போலீசார் அவர்களை பற்றிய விசாரணையை துவக்கினர் .

போலீசாரால் கைப்பற்ற பட்ட அந்த பைக்கில் போலி நம்பர் பிளேட் இருந்தபோதிலும், காவல்துறை சேஸ் எண் மற்றும் என்ஜின் எண் மூலம் அதன் உரிமையாளரை கண்டுபிடித்தனர் . பிறகு பைக் உரிமையாளர் தீரஜ் ஜகத்புரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த குழந்தையை கடத்திச் செல்லும் திட்டம் அவரது மாமா உபேந்தர் பிட்டுவால் உருவாக்கப்பட்டதாக பிடிபட்ட தீரஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.இந்த திட்டத்திற்கு கூலியாக ரூ .1 லட்சம் கொடுப்பதாக உபேந்தர் பிட்டூ,அவரிடம் கூறியதாக தீரஜ் கூறினார். பின்னர் உபேந்தர் பிட்டூவை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்ட உபேந்தர் பிட்டூ போலீசாரிடம், தான் கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதால், வசதியாக இருக்கும் உறவினரின் மகளை பணத்திற்காக கடத்த திட்டமிட்டதாக கூறினார்
பிடிபட்ட அவர்களிடமிருந்து பைக்கைத் தவிர, நான்கு துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர்.