×

வீட்டு வாடகை செலுத்த முடியாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

 

கேரளாவின் பிறவம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பிறவம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது மகளின் உடல் இன்று மூவாற்றுப்புழை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது. கடந்த 26-ம் தேதி பார்வையற்ற தாய் மற்றும் 2 வயது மகனின் உடல்களும், 27-ம் தேதி தந்தையின் உடலும் கண்டெடுக்கப்பட்டன.வீட்டு வாடகை செலுத்த முடியாமல் திண்டாடிய குடும்பத்தினர், கோத்தமங்கலம் காவல் நிலையத்தை அணுகி நிதி உதவி கோரியதாகவும், அவர்களுக்கு மாற்று வீடு ஏற்பாடு செய்து, இன்று இடம் மாற்ற திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். அதற்குள் அக்குடும்பத்தினர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்கள் மற்றும் குடும்பத்திற்கு நெருக்கமான மற்றவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்று உடல்களுக்கான பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு, பின்னர் அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.