×

ரூ 5 கோடி மதிப்பிலான சொத்துகளை யானைகளுக்கு எழுதிய நபர்!

பீகாரில் ஒரேநாளில் இரண்டு யானைகள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா அருகே ஜானிபூர் கிராமத்தைச் சேர்ந்த அக்தர் இமாம் என்ற நபர் கடந்த திங்களன்று பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அவர் தனது 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளிட்ட சொத்துகளை தான் வளர்த்துவரும் மோட்டி, ராணி என்ற இரண்டு யானைகளின் பேரில் எழுதியிருக்கிறார். 12 வயதில் இருந்து மோட்டி, ராணி என்ற இந்த இருயானைகளையும் அக்தர் இமாம் பராமரித்து வருகிறார். தனது
 

பீகாரில் ஒரேநாளில் இரண்டு யானைகள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா அருகே ஜானிபூர் கிராமத்தைச் சேர்ந்த அக்தர் இமாம் என்ற நபர் கடந்த திங்களன்று பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அவர் தனது 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளிட்ட சொத்துகளை தான் வளர்த்துவரும் மோட்டி, ராணி என்ற இரண்டு யானைகளின் பேரில் எழுதியிருக்கிறார். 12 வயதில் இருந்து மோட்டி, ராணி என்ற இந்த இருயானைகளையும் அக்தர் இமாம் பராமரித்து வருகிறார். தனது மறைவுக்குப் பிறகு யானைகள் ஆதரவற்று விடப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறுகிறார். யானைகளுக்கு எழுதிய சொத்துக்கள் போக எஞ்சியவற்றை தனது மனைவி பெயரில் இவர் எழுதிக்கொடுத்துள்ளார். தனது ஒரே மகன் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் அவனுக்கு தனது சொத்துக்களை அளிக்க முடியாது என்று கூறியுள்ள அக்தர் இமாம், தன்னார்வ அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தனது மறைவுக்குப்பிறகு இந்த அமைப்பு, யானைகளை பராமரிக்க வேண்டும் என்றும் அக்தர் இமாம் விருப்பம் தெரிவித்துள்ளார். ஒருமுறை இவரது வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று அக்தர் இமாமையும்அவரது குடும்பத்தையும் தாக்க முயற்சித்தபோது இந்த இருயானைகளும் வந்து தங்களை காப்பாற்றியதாக கூறும் இவர், அந்த நன்றிக்காகவும், யானைகள் காட்டும் பாசத்திற்காகவும் தனது சொத்துகளை அவற்றின் பெயரில் எழுதியுள்ளதாக கூறுகிறார்.