×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக… விவசாயிகளுக்கு ஆதரவாக – டிராக்டரில் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்திற்கும் மத்திய அரசுக்கும் 12 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. மத்திய அரசு சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம் என தோளை உயர்த்த, வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் என விவசாயிகள் சூளுரைக்கின்றனர். இதனால் அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. இதனிடையே வேளாண் சட்டங்களைத் தற்காலிக நடைமுறைப்படுத்த தடைவிதித்து உச்ச
 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்திற்கும் மத்திய அரசுக்கும் 12 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. மத்திய அரசு சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம் என தோளை உயர்த்த, வாபஸ் பெறாவிட்டால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் என விவசாயிகள் சூளுரைக்கின்றனர். இதனால் அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

இதனிடையே வேளாண் சட்டங்களைத் தற்காலிக நடைமுறைப்படுத்த தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களையும் ஆய்வுசெய்யக் குழு அமைத்து ஆணையிட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் முனைப்பு காட்டி வருகின்றன. இச்சூழலில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் விவசாயிகளின் சார்பில் அவர்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்துக்கு எடுத்துரைக்க டிராக்டரில் வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்வளையை மத்திய அரசு நெரிக்கிறது. நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. வேளாண் சட்டங்கள் போர்வையில் இருக்கும் கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கும் என இந்த தேசத்துக்கே தெரியும்” என்றார்.