பணிக்கு சேர்ந்த மறுநாளே நேர்ந்த துயரம்- ZIPLINE ஆபரேட்டர் கீழே விழுந்து உயிரிழப்பு
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ZipLine ஆபரேட்டர் ஆக பணியில் சேர்ந்த மறுநாளே, 24 வயது இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசர்கோடு மாவட்டம் சாமுண்டிகுன்னு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சனூப். இவரது தாயார் ஜானகி மற்றும் ஷரத், ஷ்யாம் ஆகிய சகோதரர்கள் உள்ளனர். இவர் ராணிபுரத்தில் உள்ள சுற்றுலா மையத்தில் ZipLine ஆபரேட்டர் ஆக பணிபுரிந்துவந்தார். 25 வயதான இவர், ஜிப்லைனில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனூப், பெண் ஒருவரை ZipLine-ல் அழைத்துச் செல்லும் போது, உரிய பாதுகாப்பு கயிற்றை அணியவில்லை எனவும், அப்பெண் பயத்தில் சனூப் கிருஷ்ணனின் சட்டையைப் பிடித்து இழுக்க அவர் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பணிக்கு சேர்ந்த மறுநாளே சனூப் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.