×

விடாமல் துரத்தும் கொரோனா துயரம்… கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமே 9.84 லட்சம் வாகனங்கள்தான் விற்பனை

ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு, நாடு முழுவதுமாக உள்ள 1,440 மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் 1,230 அலுவலகங்களில் கடந்த மாதம் நடந்த வாகன பதிவு விவரங்களை சேகரித்து வாகன விற்பனை குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை 42 சதவீதம் குறைந்துள்ளது. 2020 ஜூன் மாதத்தில், பைக், ஸ்கூட்டர், கார், வர்த்தக வாகனங்கள் என மொத்தம் 9.84 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. 2019 ஜூன்
 

ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு, நாடு முழுவதுமாக உள்ள 1,440 மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் 1,230 அலுவலகங்களில் கடந்த மாதம் நடந்த வாகன பதிவு விவரங்களை சேகரித்து வாகன விற்பனை குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை 42 சதவீதம் குறைந்துள்ளது.

2020 ஜூன் மாதத்தில், பைக், ஸ்கூட்டர், கார், வர்த்தக வாகனங்கள் என மொத்தம் 9.84 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. 2019 ஜூன் மாதத்தில் மொத்தம் 16.97 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வாகன விற்பனை தொடர்ந்து மந்தகதியில் உள்ளது. அனைத்து பிரிவு வாகனங்கள் விற்பனையும் கடுமையாக குறைந்துள்ளது.

கடந்த மாத மொத்த வாகன விற்பனையில், பயணிகள் வாகனங்கள் விற்பனை 38.34 சதவீதம் குறைந்து 1.26 லட்சமாகவும், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 40.92 சதவீதம் வீழ்ச்சி கண்ட 7.90 லட்சமாகவும் குறைந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 83.83 சதவீதம் குறைந்து 10,509ஆகவும், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 75.43 சதவீதம் குறைந்து 11,993ஆகவும் சரிவு கண்டுள்ளது.