×

’இன்று 4 லட்சத்து 20 ஆயிரம்… மொத்தப் பரிசோதனைகள் 1.6 கோடி’ #CoronaUpdates

கொரோனா நோய்த் தொற்று தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவே உலகை உலுக்கும் பிரச்னையாக மாறிவிட்டது. இந்தியாவில் தொடக்கத்தில் மாநகரங்கள், நகரங்களில் அதிக தொற்று இருந்த சூழல் மாறி, சின்னக் கிராமங்களிலும் தற்போது பரவல் அதிகரித்துவிட்டது. இன்றைய தேதிவரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட வில்லை. ஆனால், உலகின் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் மும்முரமாக இயங்கி வருகின்றனர். இப்போதைக்கு கொரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தொற்று அதிகம் உள்ள
 

கொரோனா நோய்த் தொற்று தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  இதுவே உலகை உலுக்கும் பிரச்னையாக மாறிவிட்டது. இந்தியாவில் தொடக்கத்தில் மாநகரங்கள், நகரங்களில் அதிக தொற்று இருந்த சூழல் மாறி, சின்னக் கிராமங்களிலும் தற்போது பரவல் அதிகரித்துவிட்டது.

இன்றைய தேதிவரை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட வில்லை. ஆனால்,  உலகின்  பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் மும்முரமாக இயங்கி வருகின்றனர்.

இப்போதைக்கு கொரோனா பரவலைத்  தடுக்க  தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தொற்று அதிகம் உள்ள இடங்களில் சோதனையை அதிகப்படுத்துவதும்தான் நமக்கு இருக்கும் வாய்ப்புகள்.

இந்தியாவில் கோரோனா சோதனைகளை நாள்தோறும் அதிகப்படுத்திக்கொண்டே வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறாது. அது அளித்திருக்கும் செய்திக் குறிப்பில்,

’முதல்முறையாக 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் மருத்துவப் பரிசோதனைகள் ஒரே நாளில் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக தினமும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த அதிகபட்ச எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,20,898  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பத்து லட்சம் பேரில் எவ்வளவு பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது (டி.பி.எம்.) என்ற கணக்கீட்டின்படி, இப்போது 11,485 பரிசோதனை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. இதுவரையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,58,49,068 ஆக உள்ளது. இந்த இரண்டு எண்ணிக்கைகளுமே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கோவிட் நோய் பாதிப்பைக் கண்டறிய 2020 ஜனவரியில் ஒரே ஒரு ஆய்வகம் மட்டும் இருந்த நிலையில், இப்போது 1301 பரிசோதனை நிலையங்கள் என்ற நிலை எட்டப்பட்ட காரணத்தால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இப்போதுள்ள ஆய்வகங்களில் 902 அரசு ஆய்வகங்களும், 399 தனியார் ஆய்வகங்களும் அடங்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் 32,223 கோவிட் நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை இன்று 8,49,431 -ஐ எட்டியுள்ளது. நோய் பாதித்தவர்களில் அதிகபட்ச அளவாக 63.54 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர். குணம் அடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு இடையில் உள்ள இடைவெளி மேலும் அதிகரித்து 3,93,360-ஐ தொட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.