×

காவல் மரணங்களில் தமிழகம் 2ஆம் இடம்: முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?

போலீஸ் காவல் மரணங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். ஆரம்பகட்டத்தில் போலீசார் தாக்குதலால் அவர்கள் உயிரிழக்கவில்லை என இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மழுப்பினர். ஆனால் இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால், சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, காவலர்கள்
 

போலீஸ் காவல் மரணங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். ஆரம்பகட்டத்தில் போலீசார் தாக்குதலால் அவர்கள் உயிரிழக்கவில்லை என இச்சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மழுப்பினர். ஆனால் இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால், சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, காவலர்கள் தாக்கியதால் தான் அவர்கள் இருவரும் உயிரிழந்தது அம்பலமானதால் சாத்தான்குள காவல்நிலைய காவலர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஒருவரான காவலர் பால்துரை அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மற்ற 9 காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. சாத்தான்குளத்தில் ஜெயராஜும் பென்னிக்ஸ் உயிரிழந்ததையடுத்து, அதிக அளவில் தமிழகத்தில் காவல் மரணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், காவல் மரணத்தில் தமிழகம் 2ம் இடத்தில் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். காவல் மரணம் குறித்து – சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், நாடு முழுவதும் 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை 113 காவல் மரணங்கள் நடந்திருப்பதாகவும் காவல் மரணங்களில் மத்திய பிரதேஷ் முதலிடத்திலும், தமிழகம், குஜராத் இரண்டாமிடத்தில் இருப்பதாகவும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.