×

“பெரும் பகுதி பொருளாதாரம் திறப்பு…கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது!” – பிரதமரின் ‘மனதின் குரல்’ உரை

டெல்லி: நாட்டின் பெரும் பகுதி பொருளாதாரம் திறக்கப்பட்டுள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பொருளாதாரத்தின் பெரும் பகுதி திறந்து விடப்பட்டுள்ளது. இது மிகவும் கவனமாக
 

டெல்லி: நாட்டின் பெரும் பகுதி பொருளாதாரம் திறக்கப்பட்டுள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பொருளாதாரத்தின் பெரும் பகுதி திறந்து விடப்பட்டுள்ளது. இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்” என்று பிரதமர் கூறினார்.

“கடைசியாக நான் மக்களிடம் பேசியபோது ​​சாலைப் பயணங்கள், விமானப் பயணம் மூடப்பட்டிருந்தது. இப்போது உரிய நடவடிக்கைகளுடன் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் கவனக் குறைவாக இருக்கக் கூடாது. சமூக விலகல் மற்றும் இன்னபிற நெறிமுறைகளை நாம் மிகவும் நேர்மையாக பின்பற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

மூன்று கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை சில தளர்வுகளுடன் மத்திய அரசு நீட்டித்துள்ளது. ரயில், சாலை என பொதுப் போக்குவரத்து குறைந்த அளவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை தவிர ஜூன் 8-ஆம் தேதி முதல் மால்கள், உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளன.