×

ராமர் கோவிலுக்கு கீழ் 2000 அடி ஆழத்தில் கோவில் பற்றிய டைம் கேப்ஸ்யூல்! – அறக்கட்டளை அறிவிப்பு

ராமர் கோவில் வரலாற்றைச் சொல்லும் டைம் கேப்ஸ்யூல் ராம ஜென்ம பூமியில் 2000 அடி ஆழத்தில் வைக்கப்படும் என்று ராமஜென்ம பூமி கட்டுமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்க வரும்புகிறோம். இதற்காக 2000ம் அடி ஆழத்தில் டைம் கேப்ஸ்யூல் வைக்கப்பட
 

ராமர் கோவில் வரலாற்றைச் சொல்லும் டைம் கேப்ஸ்யூல் ராம ஜென்ம பூமியில் 2000 அடி ஆழத்தில் வைக்கப்படும் என்று ராமஜென்ம பூமி கட்டுமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்க வரும்புகிறோம். இதற்காக 2000ம் அடி ஆழத்தில் டைம் கேப்ஸ்யூல் வைக்கப்பட உள்ளது. தாமிர பட்டையத்தில் ராமர் வரலாறு, ராமர் கோவில் வரலாறு, நீதிமன்ற வழக்கு உள்ளிட்டவை எழுதப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து புதைக்கப்படும். இதனுடன் சரித்திர புகைப்படங்களையும் வைக்கத் திட்டமிட்டுள்ளோம். வருங்காலத்தில் கோவில் தொடர்பாக யாராவது ஆய்வு செய்தால் அவர்களுக்கு அந்த டைம் கேப்ஸ்யூல் உதவியாக இருக்கும்.

ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடக்கத்துக்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் புண்ணிய இடங்களில் இருந்து மண், புனித நதிகளில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் முன்னிலையில் நடைபெறும் பூமி பூஜையின்போது இந்த தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். மண் மற்றும் தண்ணீரை நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் அனுப்பி வருகின்றனர்” என்றார்.