×

ஒரே பையனை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள்... விசித்திர காரணம்

 

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.


ஹசன்பூரில் உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சோசியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்களான சரோஜ் (20), சாவித்ரி (19) மற்றும் சண்டோஷ் (18) ஆகிய இந்தச் சகோதரிகள், ஜூலை 17 அன்று சாமுண்டா மாதா கோவிலில் தங்கள் கேமரா மேனான விகாஸைத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமண விழாவின் காணொளிகள் புதன்கிழமை இணையத்தில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்தக் காணொளிகளில், தம்பதியினர் திருமணச் சடங்குகளை முடித்த பிறகு, விகாஸ் ஒவ்வொரு சகோதரிக்கும் குங்குமம் இடுவது இருந்தது. இரு வீட்டார்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. 

ஒரே நபரைத் திருமணம் செய்துகொள்ளத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கிய சகோதரிகள், “ நாங்கள் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம், பிரிந்து வாழ்வதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தினர் தங்களுக்குத் தனித்தனியாகத் திருமணம் செய்யத் திட்டமிடுவதை அறிந்ததும் மன உளைச்சலுக்கு ஆளானோம். திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்பதை உணர்ந்தபோது, ​​நாங்கள் எங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட நினைத்தோம். பின்னர், இறப்பதற்குப் பதிலாக, நாங்கள் ஒன்றாக இருந்து ஒரே ஆணைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இந்த யோசனைக்கு அந்த பெண்களுக்கு 6 மாதங்களாக கேமரா மேனாக இருந்த விகாஸ் ஒப்புகொண்டார். 
அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டேன் என விகாஸ் கூறியுள்ளர். 


இதுகுறித்து இதுவரை முறைப்படியான புகார் எதுவும் வரவில்லை, மேலும் அவர்களின் பெற்றோரும் இந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏதேனும் புகார் அளிக்கப்பட்டாலோ அல்லது தண்டனைக்குரிய குற்றம் கண்டறியப்பட்டாலோ, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறினர்.