×

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு அவசியம் இதை தெரிந்துகொள்ளுங்கள்?

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான முதற்கட்டம் ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது. முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்னபிற நோய்களைக் கொண்டிருக்கும் 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 முதல் 45 வயதுகுட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவிருக்கிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் இவர்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதற்காக தடுப்பூசி
 

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான முதற்கட்டம் ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது. முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்னபிற நோய்களைக் கொண்டிருக்கும் 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 முதல் 45 வயதுகுட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவிருக்கிறது.

வரும் மே 1ஆம் தேதி முதல் இவர்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதற்காக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமே நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் கோவிஷீல்டு நிறுவனம் தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இலவசமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றன. தமிழ்நாடு அரசும் இம்முடிவை எடுக்கலாம். தற்போத ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்குகிறது. எப்படி முன்பதிவு செய்வது, என்னவெல்லாம் தேவை, இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

COWIN வலைதளத்தில் எப்படி முன்பதிவுசெய்து கொள்வது?

*முதலில் cowin.gov.in என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்

*அடுத்ததாக உங்களில் 10 டிஜிட் தொலைபேசி எண் அல்லது ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும்.

*அதன்பின் உங்கள் மொபைலுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிந்தால் வெரிபிக்கேசன் முடிந்து பதிவாகி விடும்.

*பின்னர் அதில் கேட்கும் தகவல்களைப் பதிய வேண்டும். முக்கியமாக அரசு அங்கீகாரம் பெற்ற ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் போட்டோ ஆதாரத்தைச் சமர்பிக்க வேண்டும்.

*இறுதியாக எந்தத் தேதியில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது என தேர்ந்தெடுக்கலாம். இந்த நடைமுறைகள் முடிவடைந்த பிறகு ரெபரென்ஸ் ஐடி ஒன்று கிடைக்கும். அதைக் கொண்டு தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

*குறிப்பாக முதல் டோஸ் போட்டுக்கொண்ட பின் 8 வார இறுதிக்குள் அடுத்த டோஸ் நீங்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான தேதியையும் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.