×

இந்தாண்டு எளிமையாக தசரா விழா: ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!

எளிமையான முறையில் இந்த ஆண்டு தசரா விழா கொண்டாடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவை காண உள்ளூர் ,வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த விழாவில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பானியை அலங்கரிக்கப்பட்ட யானை சுமந்து செல்ல அதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். இதற்கு
 

எளிமையான முறையில் இந்த ஆண்டு தசரா விழா கொண்டாடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவை காண உள்ளூர் ,வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த விழாவில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பானியை அலங்கரிக்கப்பட்ட யானை சுமந்து செல்ல அதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். இதற்கு ஜம்பு சவாரி என்று பெயர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தசரா விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்ற உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இன்று பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

இந்நிலையில் தசரா விழா குறித்து அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா, “கர்நாடகாவில் கோலாகலமாக இல்லாமல் எளிமையான முறையில் இந்த ஆண்டு தசரா விழா கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார். அக்டோபர் 17 முதல் 25 வரை நடக்கும் தசரா திருவிழாவுக்கு 10 கோடி ஒதுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.