×

மத்திய பிரதேசத்தில் ஒரு மரத்தை இரவு பகலாக காவல் காக்கும் பாதுகாவலர்கள்.. சுவாரஸ்யமான பின்னணி
 

 

மத்திய பிரதேசத்தில் ஒரு போதி மரத்தை இரவு பகலாக பாதுகாவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதன் பின்னணியில் மிக சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.


மத்திய பிரதேசம் ரைசென் நகரில் உள்ள சாஞ்சி ஸ்தூபி அருகே நடப்பட்ட ஒரு மரம் இரவு பகலாக பாதுகாப்பு வட்டத்தின் கீழ் உள்ளது. அந்த மரம் போதி மரம் அழைக்கப்படுகிறது. மத்திய பிரதேச அரசு இதுவரை அந்த மரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ரூ.64 லட்சம் செலவிட்டுள்ளது. மரத்தின் பாதுகாப்புக்காக  24*7  அதன் அருகே நான்கு ஊர்க்காவல் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மரம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

அந்த வரலாறு, 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் வடஇந்தியாவில் ஒரு மரத்தடியில் தியானம் செய்யும் போது ஞானம் பெற்றதாக கூறப்படும் கதையிலிருந்து தொடங்குகிறது. அந்த மரம் போதி மரம் அல்லது ஞான மரம் என்று கூறப்படுகிறது. கி.மு. 250-ல் பேரரசர் அசோகர் அந்த அதை பார்வையிட்டார் மற்றும் அங்கு ஒரு கோயிலை உருவாக்கினார். அசோகர் அந்த மரத்தின் ஒரு கிளையை இலங்கை மன்னன் தேவநம்பிய திஸ்லாவுக்கு பரிசாக இலங்கைக்கு அனுப்பினார். இலங்கை மன்னன் தேவநம்பி திஸ்லா அசோகர் பரிசாக கொடுத்த போதி மரத்தின் கிளையை தனது தலைநகரான அனுராதபுரத்தில் நட்டு வைத்தார். 

2012ல் அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அந்த மரத்தின் ஒரு கிளையை கொண்டு வந்து, மத்திய பிரதேசத்தின் சலாமத்பூர் அருகே  உள்ள மலைப்பகுதியில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நட்டார். அந்த மரம் தற்போது பலத்த பாதகாப்போடு வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது போதி மரம் இலைப்புழு என்ற பூச்சி தாக்கியதால், மரத்தின் இலைகள் காய்ந்து வருவதால், தற்போது  மரம் நோயை சந்தித்து வருகிறது. மரத்தில் பூச்சி தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதுகாப்பு ஊழியர்கள் கூறுகின்றனர்.