×

“உஷார் !வாட்ஸ் அப்பில் வலம் வரும் அழகிகள்”- ஆசையாக பேசி ஆட்டைய போட்டு ..நிர்வாண வீடியோ மூலம் நிர்மூலமாக்குவார்கள்..

பெங்களூருவில் விட்ஃபீல்டில் வசிக்கும்26 வயது சைமன் ஒரு தனியார் நிறுவன பொறியாளர் .இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்துள்ளார் .கடந்த மாதம் ஒரு பெண் இவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ,தான் கேரளாவை சேர்ந்த நிஷா என்றும் ,தான் ஒரு மென்பொறியாளர் என்றும் இவரிடம் அறிமுக படுத்திகொண்டு தினமும் பேசி வந்துள்ளார் .நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களின் நட்பு வளர்ந்துள்ளது . இதற்கிடையில் ,சென்ற வாரம் அந்த பெண் இவரிடம் வீடியோ கால் மூலம்
 

பெங்களூருவில் விட்ஃபீல்டில் வசிக்கும்26 வயது சைமன் ஒரு தனியார் நிறுவன பொறியாளர் .இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்துள்ளார் .கடந்த மாதம் ஒரு பெண் இவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ,தான் கேரளாவை சேர்ந்த நிஷா என்றும் ,தான் ஒரு மென்பொறியாளர் என்றும் இவரிடம் அறிமுக படுத்திகொண்டு தினமும் பேசி வந்துள்ளார் .நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களின் நட்பு வளர்ந்துள்ளது .

இதற்கிடையில் ,சென்ற வாரம் அந்த பெண் இவரிடம் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியுள்ளார் ,பிறகு அவரை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாகவும் ,அதனால் வீடியோ காலில் நிர்வாண போஸ் தரும்படியும் கூறியுள்ளார் .முதலில் அவர் அதற்கு தயங்கியதும் ,உடனே நிஷா நீங்கள் அப்படி நின்ற பிறகு தானும் நிர்வாண போஸ் கொடுப்பதாக கூறியதும் அவர் மயங்கி நிர்வாண போஸ் கொடுத்தார் .

பிறகு அவர்களின் லைன் கட்டாகியுள்ளது .அதற்கு பிறகு அவர் பலமுறை அந்த பெண்ணிடம் பேச முயன்று முடியாமல் போனது .
இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு அவரின் நிர்வாண போட்டோவை அனுப்பி, ஒரு நபர் இவரிடம் பேரம் பேசியுள்ளார் ,உடனே 50000 ரூபாய் தரவில்லையெனில் அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.உடனே பயந்து போன சைமன் 22000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார் .பிறகு அந்த நபர் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் ,சைமன் உடனே இது நிஷாவின் வேலைதான் என தெரிந்துகொண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார் .சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .