×

கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை தொடர்ந்து… மத கலப்பு திருமண ஊக்கத்தொகை திட்டம் வாபஸ்.. யோகி அரசு யோசனை

உத்தர பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளநிலையில், மத கலப்பு திருமண ஊக்கத்தொகை திட்டத்தை திரும்ப பெற அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் 1976ம் ஆண்டில் சாதி மற்றும் மத கலப்பு திருமண ஊக்கதொகை நிதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, ஊக்கதொகை பெற கலப்பு திருமணம் செய்தவர்கள் திருமணம் நடந்த 2 ஆண்டுகளுக்குள் மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
 

உத்தர பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளநிலையில், மத கலப்பு திருமண ஊக்கத்தொகை திட்டத்தை திரும்ப பெற அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் 1976ம் ஆண்டில் சாதி மற்றும் மத கலப்பு திருமண ஊக்கதொகை நிதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, ஊக்கதொகை பெற கலப்பு திருமணம் செய்தவர்கள் திருமணம் நடந்த 2 ஆண்டுகளுக்குள் மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் ஆவணங்கள சரிபார்த்து அந்த விண்ணப்பத்தை உத்தர பிரதேச ஒருங்கிணைந்த துறைக்கு அனுப்புவார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

அதன்பிறகு, கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு உத்தர பிரதேச அரசு ஊக்கத்தொகை வழங்கும். கடந்த ஆண்டில் மட்டும் கலப்பு திருமண செய்த 11 ஜோடிகளுக்கு உத்தர பிரதேச அரசு ஊக்கத்தொகை (ரூ.50 ஆயிரம்) வழங்கியது. இந்த ஆண்டு 4 ஜோடிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. கடந்த 44 ஆண்டுகளாக இந்த திட்டம் அங்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த திட்டத்தை திரும்ப பெற உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லவ் ஜிஹாத்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அண்மையில் லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உத்தர பிரதேசம் சட்டவிரோதமாக மதம் மாற்றுவதை தடை செய்யும் அவசர சட்டம் 2020 நிறைவேற்றியது. இந்த அவசர சட்டத்துக்கு அம்மாநில கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அந்த சட்டம் கடந்த மாதம் இறுதியில் அமலுக்கு வந்தது. தற்போது மத கலப்பு திருமணங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை திரும்ப பெறுவது தொடர்பாக அம்மாநில அரசு யோசனை செய்து வருகிறது.