×

ஹத்ராஸ் வழக்கு… சி.பி.ஐ. விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அந்த பெண்ணின் உடலை போலீசாரை நள்ளிரவில் தகனம் செய்தனர். மேலும் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீசார் கூறுகின்றனர். இந்த
 

ஹத்ராஸில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அந்த பெண்ணின் உடலை போலீசாரை நள்ளிரவில் தகனம் செய்தனர். மேலும் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹத்ராஸ் பாலியல் மற்றும் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.

சி.பி.ஐ.

இந்த சூழ்நிலையில், ஹத்ராஸ் வழக்கு விசாரணையை உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிமன்றம், ஹத்ராஸ் வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு உள்பட ஹத்ராஸ் வழக்கின் அனைத்து அம்சங்களும் அலகாபாத உயர் நீதிமன்றத்தால் கவனிக்கப்படும்.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள்

தற்சமயம் சி.பி.ஐ. வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது. மேலும் பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. சி.பி.ஐ. விசாரணை முடிந்த பிறகு வழக்கை மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடியும். சி.பி.ஐ. தனது நிலை அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.