×

இந்த மாதத்தில் தொடர்ந்து 2வது முறையாக டெபாசிட் வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ.

ரிசர்வ் வங்கி அண்மையில் யாரும் எதிர்பாராத வண்ணம் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) முக்கிய கடனுக்கான வட்டியை 0.40 சதவீதம் குறைத்து 4 சதவீதமாக குறைத்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), சில்லரை குறித்த கால டெபாசிட் மற்றும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது
 

ரிசர்வ் வங்கி அண்மையில் யாரும் எதிர்பாராத வண்ணம் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) முக்கிய கடனுக்கான வட்டியை 0.40 சதவீதம் குறைத்து 4 சதவீதமாக குறைத்தது. இதனையடுத்து ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), சில்லரை குறித்த கால டெபாசிட் மற்றும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பிக்சட் டெபாசிட் வட்டியை எஸ்.பி.ஐ. குறைத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி 7 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவான பல்வேறு முதிர்வு காலம் கொண்ட சில்லரை குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் குறைத்துள்ளது. உதாரணமாக 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான முதிர்வு கால சில்லரை குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 3.3 சதவீதத்திலிருந்து 2.9 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல் ஒராண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான பல்வேறு முதிர்வு கால நிரந்தர (பிக்சட்) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதமும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்டுகளுக்கனா வட்டி விகிதத்தை 0.30 சதவீதமும் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 27ம் (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கியின் பிக்சட் டெபாசிட் கணக்குகளில் பல கோடி மூத்த குடிமக்கள் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்த டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டி வருவாயை வைத்துதான் பல மூத்த குடிமக்கள் தங்களது காலத்தை தள்ளி வருகின்றனர். இந்நிலையில் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை எஸ்.பி.ஐ.. குறைத்து இருப்பது மூத்த குடிமக்களை பாதிக்கும்.