×

காப்பீட்டு அலுவலகங்களை 3 நாட்கள் மட்டும் திறக்க அனுமதி.. மணிப்பூரில் ஊரடங்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிப்பு

மணிப்பூரில் அம்மாநில அரசு சில தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கை ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் 2வது அலையின் தீவிரம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும் பல மாநிலங்கள் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து வருகின்றன. அதேசமயம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. இதனால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்ப வருகின்றனர். மணிப்பூரில் முதல்வர்
 

மணிப்பூரில் அம்மாநில அரசு சில தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கை ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் 2வது அலையின் தீவிரம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும் பல மாநிலங்கள் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து வருகின்றன. அதேசமயம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. இதனால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்ப வருகின்றனர்.

பைரன் சிங்

மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு அம்மாநிலத்தில் கோவிட் ஊரடங்கை ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதேசமயம் சில தளர்வுகளையும் வழங்கியுள்ளது. வங்கிகளை போலவே காப்பீட்டு அலுவலகங்களை காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை வாரத்தில் 3 நாட்கள் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இ காமர்ஸ்

ஆன்லைன் வர்த்தகத்தில் வீட்டு விநியோகத்துக்காக காய்கறி, மீன், இறைச்சி மற்றும் மளிகை பொருட்களை சேர்த்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டெலிவரி பணியாளர்களால் சமைத்த உணவை வீட்டுக்கு சென்று வழங்க அனுமதி அளித்துள்ளது. மாநில அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் அரசு கேட்டுக்கொண்டது.