×

ஹத்ரஸ் பாலியல் கொடூரம் : உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை நோட்டீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண் டெல்லியிலுள்ள ஜவர்கஹலால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்ட
 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி அம்மாநில காவல்துறையின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண் டெல்லியிலுள்ள ஜவர்கஹலால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. கொடூரமான தாக்குதல்களுக்கு ஆளான அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விளக்கமளிக்க உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை தானாக முன்வந்து நீதிமன்றம் கையிலெடுத்துள்ளது.அக்டோபர் 12ஆம் தேதிக்குள் ஹாத்ராஸ் சம்பவம் குறித்து விளக்கமளிக்க மாநில உள்துறை, காவல்துறை மற்றும் ஹாத்ராஸ் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.