×

பறவை காய்ச்சலை பேரிடராக அறிவித்தது கேரள அரசு!

கேரளாவில் வாத்துகளுக்கும் கோழிகளுக்கும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அதனை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலும் ஆலப்புழா மாவட்டத்திலும் பல வாத்து மற்றும் கோழி பண்ணைகள் இருக்கின்றன. அண்மையில், இந்த பண்ணைகளில் சில வாத்துகள் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தன. சந்தேகமடைந்த அதிகாரிகள், பறவைகளின் மாதிரிகளை சேகரித்து தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில், எச்.5, என்.8 என்னும் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக
 

கேரளாவில் வாத்துகளுக்கும் கோழிகளுக்கும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அதனை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலும் ஆலப்புழா மாவட்டத்திலும் பல வாத்து மற்றும் கோழி பண்ணைகள் இருக்கின்றன. அண்மையில், இந்த பண்ணைகளில் சில வாத்துகள் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தன. சந்தேகமடைந்த அதிகாரிகள், பறவைகளின் மாதிரிகளை சேகரித்து தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில், எச்.5, என்.8 என்னும் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காய்ச்சல், மனிதர்களுக்கும் பரவும் என்று அறிவுறுத்தப்பட்டதால் பண்ணைகளில் இருந்த அனைத்து வாத்து மற்றும் கோழிகளையும் அழிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன் படி, ஆயிரக் கணக்கில் வாத்துகளும் கோழிகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதற்கு அரசு தரப்பில் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திற்கு இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கேரளாவில் இருந்து பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோழி மற்றும் வாத்துகளுக்கு வேகமாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் இதனை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸில் இருந்து மக்கள் மீள முடியாமல் சிக்கித் தவித்து கொண்டிருக்கும் சூழலில், தற்போது இந்த பறவை காய்ச்சல் பரவுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.